Share with Friends
card-bg-img
review

Gulaebaghavali

trailer
2.75
Cineulagam
Public Opinions

What's your reaction? React Now

0%
0%
0%

கடந்த 1955ம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் புதையலை தேடிச்செல்லும் கதையை மையமாக வைத்து மாபெரும் வெற்றியடைந்த படம் குலேபகாவலி. அதே பெயரில் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு பிரபு தேவா ஹன்சிகா நடிப்பில் புதுமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் குலேபகாவலி. இப்படம் சொல்லும் கதை என்ன, எதை நோக்கிய பயணம் இது? வாருங்கள் பார்க்கலாம். குலேபகாவலிக்குள் போகலாம்..

கதைக்களம்

குலேபகாவலி என்னும் ஒரு ஊர் இருக்கிறது. இதன் பெயரை சொன்னதுமே பலரும் பயப்படுவார்கள். இந்த ஊரில் ஒரு கோவில். வித்தியாசமான மனிதர்கள் கொண்ட கிராமம். ஊரின் தலைவராக வேல.ராமமூர்த்தி.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

படத்தின் ஹீரோவான பிரபு தேவா, மன்சூர் அலிகான், யோகி பாபுவுடன் சேர்ந்து சிலை கடத்தல் தொழிலை செய்கிறார். அவர் வழக்கம் போல தன் தொழிலை செய்ய, ஒரு நாள் வில்லன் மதுசூதன் ராவ் மற்றும் ஆனந்த் ராஜ் கும்பலிடம் எதிர்பாராத விதமாக சிக்குகிறார்.

ஹன்சிகா ஒரு கிளப் டேன்சர். இவரும் ஒரு பின்னணிக்காக இவரும் தனி ரகமாக சின்ன சின்ன கொள்ளைகளில் ஈடுபடுகிறார். நடிகை ரேவதிக்கும் ஒரு வித்தியாசமான ரோல். படத்தில் பாருங்கள்.

இந்நிலையில் குலேபகாவலியின் ரகசியத்தை தெரிந்து கொண்ட வில்லன் மற்றும் ஆனந்த் ராஜ் கும்பல் தங்கள் கூட்டாளியான ராமதாஸ் தலைமையில் பிரபு தேவாவை ஏவிவிடுகிறார்கள். வரும் வழியில் ஒரு ஆபத்தில் இருக்கும் ஹன்சிகாவை தங்களுடன் சேர்த்து விசயம் தெரியாமல் புதையலை நோக்கி பயணம் செய்கிறார்கள்.

போகும் வழியில் ரேவதி, ஹன்சிகா, ராமதாஸ், பிரபு தேவா என எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். இவர்கள் ஒரு திட்டத்தை தீட்டி ரகசிய புதையலை அபகரிக்க நினைக்கிறார்கள்.

அதற்குள் நடப்பதுவோ வேறு. கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாத நிலை. ஆனால் புதையலுக்குள் உள்ளிருக்கும் மர்மம் தெரிந்து, கொள்ளை அடிக்க முயலும் போது இவர்கள் என்ன ஆனார்கள், அப்படி உள்ளே என்ன தான் இருந்தது என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

வெள்ளைக்காரன் காலத்தில் ஆங்கிலேயனுக்கு உதவியாளாய் இருந்த நம்மூர் ஆள் ஒருவர் ஒரு தந்திரமான விசயத்தை செய்து ரகசிய புதையலை வைப்பது தான் படத்தின் கரு.

தேவி படத்தில் ஒரு திகிலான அனுபவம் கொடுத்த பிரபு தேவா இப்படத்தில் அதை தளர்த்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனாலும் அவரின் தேர்ந்த நடிப்பு, அணுகும் விதம் என வித்தியாசம் காட்டுகிறார்.

சிலை திருடுவதில் வேடிக்கையாய் அவர் செய்யும் வேலைகள் சிம்பிளாக தெரிந்தாலும் பின்னர் தன் ஸ்டைலால் சீரியஸ் காட்டுகிறார். அவரின் நடனம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.

நடிகை ஹன்சிகாவுக்கு படங்கள் இப்போது குறைவு தான். ஆனாலும் இந்த படத்தில் சீனியர்களுடன் கைகோர்த்துள்ளார். சத்யனை தன் வலையில் சிக்க வைத்து வெரும் ஆளாக அவரை ஆக்குவது இவரின் ஃபன்.

நடிகை ரேவதிக்கு பவர் பாண்டி படத்திற்கு பிறகு இப்படத்தில் சொல்லும் படியான ரோலை கொடுத்துள்ளார்கள். அதிலும் அவரின் நடிப்பு, வித்தியாசமான தோற்றம், டானிசம் என வேறு லெவலில் உள்ளது.

மன்சூர் அலிகான், யோகி பாபு இருவரின் கூட்டணியில் அமைந்த காமெடி படம் முழுக்க இருக்கிறது. ஆங்காங்கே நம்மை உற்சாகம் மூட்டுகிறது. குறிப்பாக நானும் ஹீரோ தான் என யோகி பாபு செய்யும் காமெடி கிளாஸ்.

மொட்டை ராஜேந்திரன் இதில் கூடுதலாக ஒரு இடம் பிடிக்கிறார். அவரின் அம்மா செண்டிமெண்ட் நிச்சயம் அனைவரையும் கவரும். இவருக்கு ஒரு சில காட்சிகள் என்றாலும் ஓயாத சிரிப்பு தான்.

வில்லனுக்கும் புதையலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. அதை மர்மமாக வைத்து தேடி எடுக்க புது முயற்சியை கையாள்கிறார்கள். படத்தில் கவனிக்க வேண்டிய இடங்கள் இரண்டு தான்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதை ட்விஸ்ட் மூலம் காட்டியிருப்பார்கள். ஹன்சிகா ஆபத்தில் இருந்த போது யாரோ ஒருவர் அவரை காப்பாற்றுவார். அவர் யார் என படத்தில் பாருங்கள்.

ஆனால் அதைவிட ரகசிய புதையலை தேடி எடுப்பது முக்கியமானதாக தெரியும். கிடைத்த புதையலை தவறவிட்டுவிட்டு பின்னர், அதில் இருக்கும் மர்மத்தை தெரிந்த பின் அதை மீட்க தலைதெறிக்க ஓடுவது என படத்துக்கு உத்வேகம் காட்டுகிறார் இயக்குனர் கல்யாண்.

கிளாப்ஸ்

பிரபு தேவாவின் நடனத்தில் ஓரிரு பாடல்கள் இப்படத்திற்கு பெரும் புரமோஷன். பாராட்டலாம்.

ரேவதிக்கு ஒரு வித்தியாசமான ஸ்டைல். புதுமையான பாவனைகளோடு புகுந்து விளையாடுகிறார்.

மொட்டை ராஜேந்திரன் மம்மி சென்டிமெண்ட் சீனில் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

விவேக் மெர்வின் பின்னணி இசை, பாடல்கள் என கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோர்.

பல்ப்ஸ்

முதல் பாதி கொஞ்சம் போர் அடிப்பது போல தோன்றுகிறது.

சில கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் இயல்பை குறைப்பது போன்ற ஒரு ஃபீல்.

மொத்தத்தில் குலேபகாவலி ஒரே ஜாலி. படம் போன போக்கு ஒரு முழுமையான பொழுதுப்போக்கு.