Share with Friends

Latest News

See More
card-bg-img
2.5
Cineulagam
Public Opinions

What's your reaction? React Now

0%
0%
0%

தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பலரும் ஹீரோவாக வந்துவிட்டனர். அதில் நிலைத்து நின்றது என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க ஜிவி போராடி வந்தாலும் நாச்சியார் அவருக்கு நல்ல பாதையை அமைத்து கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து ஜிவி முதன் முதலாக பேமிலி ஆடியன்ஸிற்காக நடித்த படம் தான் செம, டைட்டில் போல் படம் இருந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ஜிவிக்கு இன்னும் 3 மாதத்தில் திருமணம் செய்யவேண்டும், இல்லையென்றால் 6 வருடத்திற்கு திருமணம் நடக்காது. மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று ஜாதகத்தில் சொல்கின்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதை தொடர்ந்து ஜிவிக்கு பெண் பார்க்க ஆரம்பிக்க, அவரை சில பெண்கள் மறுக்க ஒரு வழியாக மன்சூர் அலிகான் தன் மகளை ஜிவிக்கு கொடுக்க ஓகே சொல்கின்றார்.

பெண்ணிற்கு பூ வைக்க வரும் நேரத்தில் அந்த ஊர் எம். எல். ஏ மகன் மன்சூர் அலிகான் மகள் மீது ஆசைப்படுகிறார்.

இதனால் ஜிவி திருமணம் நிற்கும் நிலை அடைய, அதை தொடர்ந்து என்ன ஆகின்றது, இந்த ஜோடி இணைந்ததா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜிவி என்றாலே ஏதோ அடல்ட் ஹீரோ பார்த்த காலம் போய் நாச்சியாரில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து, செமவில் பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்துள்ளார். அதுவும் ஓரளவிற்கு பூர்த்தி செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவிடம் வெகுளியாக பேசும் போதும் சரி, அம்மாவை திட்டும் பெண்ணிடம் திட்டாதப்பா என்று கெஞ்சும் இடத்திலும் சரி ஜிவி நடிகனாக மெல்ல வளர்ந்து வருவது தெரிகின்றது.

வார வாரம் வெள்ளிக்கிழமை வந்தால் யோகிபாபுவும் இப்போது கூட வருகின்றார். அந்த அளவிற்கு அவருக்கான காலம் தான் போல இது, இனி ஒரு சில வருடங்களுக்கு ஹீரோவிற்கு நண்பன் கதாபாத்திரம் இவருக்கு தான் குத்தகை. வழக்கம் போல் கவுண்டரில் கலக்கினாலும் இதில் பெண்களை கிண்டல் செய்து வரும் காமெடி கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கின்றது.

பாண்டிராஜ் வசனம் என்றாலே எப்போதும் ஸ்பெஷல் தான், மிகவும் எளிதாக இன்றைய ட்ரெண்டில் என்ன இருக்கின்றதோ அதை, கிராமத்து ஆட்கள் கிண்டல் செய்வது போல் வைத்து கலகலப்பூட்டுவார். அதை இதிலும் சிறப்பாக செய்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் இது படமே பாண்டிராஜ் தான் எடுத்தாரோ என்று தோன்றுகின்றது, அந்த அளவிற்கு அவர் ஸ்டைலிலேயே எடுத்துள்ளார் வள்ளிக்காந்த்.

காதல் தோல்வி அடைந்தால் பசங்க மாதிரி எங்களால் இருக்கமுடியாது. எங்களால் முடிந்த அளவிற்கு வாட்ஸ் அப்பில் சோகமாக ஸ்டேட்டஸ் வைப்போம் என்று ஹீரோயின் சொல்வதெல்லாம் அப்படியே இன்றை தலைமுறை காதலர்களுக்கு பொருந்தும்.

ஆனால், பாண்டிராஜ் வசனம் எழுதிய படத்தில் ஏன் பெண்களை கிண்டல் செய்யும் வசனங்கள் என்று தான் புரியவில்லை. அதிலும் கருப்பாக இருப்பதை வைத்து வரும் காமெடி காட்சிகள் எல்லாம் இந்த காலத்திலும் ஏன் சார் இப்படி.

விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் திருச்சியை சுற்றி சுற்றி படம் பிடித்துள்ளார்கள். அதிலும் தன் மகனின் திருமணம் நிற்பதை அறிந்து ஜிவியின் அம்மா கிணற்றுக்குள் விழும் காட்சி எல்லாம் அத்தனை யதார்த்தமாக படம் பிடித்துள்ளார். ஜிவியின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட் மெட்டிரியல் தான்.

க்ளாப்ஸ்

ஜிவி, யோகிபாபு காமெடி காட்சிகள்.

பாண்டிராஜின் யதார்த்தமான வசனம்.

இரண்டாம் பாதியில் மன்சூர் அலிகான் ஏமாறும் காட்சிகள்.

பல்ப்ஸ்

மிகவும் பார்த்து சலித்து போன கதை தான்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

காமெடி காட்சிகள் நன்றாகவே இருந்தாலும் உருவத்தை வைத்து கிண்டல் செய்வது சரியில்லை.

அடுத்தடுத்து யூகிக்க முடிந்த காட்சிகள், அதிலும் அந்த வில்லன் கதாபாத்திரம், எதற்கு இவர் படத்தில் என்று தான் கேட்க தோன்றுகின்றது.

மொத்தத்தில் படம் டைட்டிலுக்கு ஏற்றது போல் செம லெவலில் இல்லை என்றாலும் ஒரு முறை பார்க்கும் லெவலில் தான் உள்ளது.