Share with Friends

Latest News

See More
card-bg-img
3
Cineulagam
Public Opinions

What's your reaction? React Now

0%
0%
0%

தமிழ் சினிமா தற்போதெல்லாம் புதிய புதிய கதை களங்களில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. அந்த வகையில் நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வரும் சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் ஜெயம் ரவியுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்பேஸ் கதைக்களம் தான் டிக் டிக் டிக். ரசிகர்களை இந்த வித்தியாச கதைக்களம் கவர்ந்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பக்காட்சிலேயே 8 டன் எரிகல் சென்னையில் வந்து விழுகின்றது. இதனால் ஒரு சில உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அதை விட பெரியளவில் ஒரு எரிகல் மோதவருவதாக தகவல் கிடைக்கின்றது.

அது வந்து மோதினால் தமிழகம், இலங்கை, ஆந்திரா ஆகிய இடங்கள் அழியும், இதை தடுக்க மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவி உதவியுடன் ஒரு சில அமைப்பினரை விண்வெளிக்கு அனுப்பி அந்த எரிகல்லை உடைத்து கல்லை திசை திருப்ப ப்ளான் செய்கின்றனர். ரவி இந்த ப்ளானை வெற்றிகரமாக முடித்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர், அந்த வகையில் வனமகன், மிருதனை தொடர்ந்து விண்வெளி சார்ந்த ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே ரவியை பாராட்டலாம், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுன் மற்றும் கேப்டனாக வரும் வின்செண்ட் என அனைவருமே தங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சரி ஸ்பேஸ் படம் என்றாலே நமக்கு பல ஹாலிவுட் படங்கள் நினைவிற்கு வரும், அதிலும் கிராவிட்டி, இண்டர்ஸ்டெல்லர் ஆகிய படங்கள் சமீபத்திய ரெபரன்ஸ், அந்த படம் அளவிற்கு நினைத்தாலும் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் எடுக்க முடியாது.

அந்த வகையில் டிக் டிக் டிக் எப்படி என்றால் 40 மார்க் எடுத்து பாஸ் ஆகியுள்ளது என்றே சொல்லலாம், ஏனெனில் ஜெயம் ரவி தான் இந்த மிஷினை முடித்தாக வேண்டும், அதற்காக பல வருடம் மிலிட்ரியில் இருந்த வின்செண்ட் செய்யமுடியாததை கூட ஜெயம் ரவி ஏதோ பொட்டிக்கடையில் மிட்டாய் வாங்குவது போல் செய்வது என்ன லாஜிக்.

படத்தில் லாஜிக் எல்லாம் பார்த்தால் கிலோ எவ்வளவு என்று தான் கேட்க தோன்றும், அந்த அளவிற்கு பல இடங்களில் லாஜிக் எல்லை மீறல், ஆனால், அதையும் மீறி ஜெனரல் ஆடியன்ஸ் நான் லாஜிக் எல்லாம் பார்க்க மாட்டேன், ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் ஜாலியாக இருக்கின்றதோ இல்லையோ, ஒரு புது அனுபவத்தை இந்த டிக் டிக் டிக் கொடுக்கும்.

ஹாலிவுட்டில் ரிலிஸான ஆர்மகடான் படத்தின் சாயல் தான் இந்த டிக் டிக் டிக், அதே கதைக்களம் என்றாலும் முடிந்த அளவிற்கு நம்ம ஊர் மக்களுக்கு புரியும் படி சொன்னதற்காகவே சக்தி சௌந்தர்ராஜனை மனம் திறந்து பாராட்டலாம். கொஞ்சம் Now you see me சண்டைக்காட்சியை கூட காப்பி அடித்துள்ளீர்கள் போல?.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே ஸ்பேஸுக்கு சென்ற அனுபவம், டி.இமான் இரண்டாம் பாதியில் மெதுவாக செல்லும் காட்சியை இசையால் தூக்கிப்பிடிக்கின்றார், இவர்களை எல்லாம் விட சிஜி டீம் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும், இத்தனை கம்மி பட்ஜெட்டில் இவ்வளவு தரமான காட்சிகளை தந்துள்ளனர்.

க்ளாப்ஸ்

கதைக்களம் தமிழில் இப்படியெல்லாம் படம் வருமா? என்று நினைக்க, அதை கொண்டு வந்த சக்தி சௌந்தராஜனுக்கு பாராட்டுக்கள்.

படத்தின் முதல் பாதி செம்ம வேகமாக செல்கின்றது, எப்போது ஸ்பேஸிற்கு செல்வார்கள் என்ற ஆர்வம் தொற்றிக்கொள்கின்றது.

இரண்டாம் பாதியில் சீனா விண்வெளி வீரர்களிடம் இருந்து அணு ஆயுதத்தை திருடி விட்டு வெளியே விண்வெளியில் ரவி மிதக்கும் காட்சி, ஹாலிவுட் தரம்.

இசை, ஒளிப்பதிவு, சிஜி ஒர்க் என அனைத்தும் திருப்தி.

பல்ப்ஸ்

முன்பே சொன்னது போல் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக், கொஞ்சம் ரவியை தவிர மற்றவர்களுக்கு வேலை கொடுத்திருக்கலாம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஸ்பேஸிற்குள் கதை நகர்வதால் நமக்கு கொஞ்சம் படம் மெதுவாகவே இரண்டாம் பாதி செல்வது போன்ற உணர்வு.

சீனா விண்வெளி வீரர்களுடன் நடக்கும் விஷயம் இதற்கா இவ்ளோ பில்டப் என தோன்றுகின்றது.

மொத்தத்தில் ஹாலிவுட் படங்கள், லாஜிக் எல்லாம் மறந்து உள்ளே சென்றால் கண்டிப்பாக டிக் டிக் டிக் ஒரு புது அனுபவத்தின் நுழைவு வாயிலாக இருக்கும்